இந்த வீரர் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்! - TamilSpark
TamilSpark Logo
விளையாட்டு WC2019

இந்த வீரர் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்!

உலகளவில் ICC பேஸ்ட்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி முதல் இடத்திலும், ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் ரோகித்சர்மா இந்திய அணியில் விளையாடுவது இந்திய அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் அப்பாஸ்.

இதுபற்றி அவர் கூறுகையில் ரோஹித் சர்மா பந்துகளை மிக அபாரமாக கணித்து விளையாடுகிறார். ஆட்டத்தின் தொடக்கத்திலையே அவர் பந்துகளை கணித்துவிடுவதால் அடுத்து வரும் பந்துகளை மிக அபாரமாக அடித்து விளையாடுகிறார் என ரோஹித் சர்மாவை புகழந்துள்ளார் ஜாகிர் அப்பாஸ்.

மேலும், மற்றவீரர்களை போல் இல்லாமல் பலவிதமான ஷாட்டுகளை அடித்து விளையாடுவதில் சிறந்தவராகவும் அவர் உள்ளார். என்னை கேட்டால் இந்த உலகின் மிக சிறந்த துடுப்பாட்டக்காரர் ரோகித்சர்மா தான் என கூறுவேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் அப்பாஸ் புகழ்ந்துள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo