விராட் கோலி ஏன் இப்டி பண்றாரு.? சர்ச்சை கேள்விக்கு ரோகித் சர்மா காட்டமான பதில்.!

விராட் கோலி ஏன் இப்டி பண்றாரு.? சர்ச்சை கேள்விக்கு ரோகித் சர்மா காட்டமான பதில்.!


rohit talk about virat

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.  
 
நேற்றய ஆட்டத்தில் களமிறங்கிய விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். முதல் ஒருநாள் போட்டியில் 8 ரன்னிலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 18 ரன்களிலும் விராட் கோலி ஆட்டமிழந்தார். நேற்றய  ஆட்டத்திலும் விராட் கோலி டக் அவுட் ஆனதால் விராட் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.

நேற்றய ஆட்டத்தின் வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா பேசுகையில், நாங்கள் வீரர்களிடம் என்ன எதிர்பார்த்தமோ அது கிடைத்தது. விராட் கோலிக்கு நம்பிக்கை தேவைப்படுகிறதா என்று எழுப்பபட்ட கேள்விக்கு, நீங்க என்ன பேசுறீங்கனு தெரிஞ்சு தான் பேசுறீங்களா என்று காட்டமாக பதில் அளித்தார். விராட் கோலி பார்ம் குறித்து அணி நிர்வாகத்துக்கு எந்த கவலையும் இல்லை. அவர் தென்னாப்பிரிக்க தொடரில் கூட நன்றாக விளையாடினார். கோலிக்கு எந்த சிக்கலும் இல்லை என கூறினார்.