சச்சின் தோனியுடன் இணைந்தது பெருமை!. உணர்ச்சிப்பூர்வமாக பேசிய ரோஹித் ஷர்மாவின் வீடியோ!

சச்சின் தோனியுடன் இணைந்தது பெருமை!. உணர்ச்சிப்பூர்வமாக பேசிய ரோஹித் ஷர்மாவின் வீடியோ!


rohit talk about award

இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மாவிற்கு இந்தாண்டிற்கான கேல் ரத்னா விருது வழக்கப்படும் என இந்திய அரசு அறிவித்தது. 

கேல் ரத்னா விருதானது இந்திய அரசு சார்பில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.ரோகித் சர்மாவுக்கு மத்திய அரசின் சார்பில் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை ரோகித் சர்மா பகிர்ந்துக்கொண்ட வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

அதில் "கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்த விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கு என் நன்றிகள். சச்சின், தோனி, கோலியுடன் என்னுடைய பெயரும் கேல் ரத்னா விருது பெற்றவர்களுடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து கடினமாக உழைக்கவும், அதன் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் உறுதி கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.