மரண காட்டு காட்டிய ரோஹித் ஷர்மா.! அவர் மட்டும் இல்லைனா மொத்தமா போயிருக்கும்.!

மரண காட்டு காட்டிய ரோஹித் ஷர்மா.! அவர் மட்டும் இல்லைனா மொத்தமா போயிருக்கும்.!


rohit-sharma-today-played-very-well

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் களமிறங்கினர். 

இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இளம் வீரர் சுப்மான் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக களமிறங்கிய புஜாரா 21 ரன்களில்ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி டக் அவுட் ஆகி  அதிர்ச்சி அளித்தார். 

cricket

இதனையடுத்து களமிறங்கிய ரகானே துவக்க வீரர் ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல பட்னர்ஷிப் கொடுத்தார். ஆனால் அதிரடியாக ஆடிய துவக்க வீரர் ரோஹித் ஷர்மா 161 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து அரைசதம் அடித்த ரஹானேவும் 67 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார்.

தற்போது ரிஷப் பண்ட் 13 ரன்களுடனும், அஸ்வின் 9 ரன்களுடனும் ஆடிவருகின்றனர்.  தற்போது 80 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. இன்றைய ஆட்டத்தில் ரோஹித் ஷர்மாவின் சிறப்பான ஆட்டம் தான் இதுவரை இந்திய அணி களத்தில் ஆடிக்கொண்டிருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.