விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் விளையாட தயார்படுத்தி கொள்வதற்காக சிகிச்சைக்கு வந்த ரோஹித் சர்மா!

Summary:

டெஸ்ட் போட்டியில் விளையாட தயார்படுத்தி கொள்வதற்காக, காயத்திற்கு சிகிச்சை பெற ரோகித் சர்மா தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு இன்று வந்தடைந்துள்ளார்.

கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி, இந்திய அணித் தேர்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, ரோஹித் ஷர்மாவின் காயம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரோஹித் ஷர்மாவுக்கு 2 முதல் 4 வாரங்கள் வரை ஓய்வு அவசியம். சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யவும் சாத்திக்கூறு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ரோஹித் ஷர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. அவர் காயத்திலிருந்து குணமடைந்தால் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என பிசிசிஐ அறிவித்தது. இந்தநிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு ரோகித் சர்மா இன்று காலை வந்தடைந்துள்ளார்.  

அங்கு அவருக்கு ஏற்பட்ட இடது தோள்பட்டை காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் வந்துள்ளார்.  இதில் 100 சதவீதம் குணமடைவதற்கான சிகிச்சை அவருக்கு வழங்கப்படும். சிகிச்சையில் முழுமையாக குணமடைந்த பிறகு டெஸ்ட் அணியில் மட்டும் அங்கம் வகிக்கும் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement