விளையாட்டு

இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ரோஹித் சர்மா!!

Summary:

இந்த தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு ரோஹித் சர்மா ஓபன் டாக் !!

இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ரோஹித் சர்மா!!

Image result for rohit

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 14-வது ஆசியக் கோப்பைப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 28 ஆம் தேதி நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும்.

முதல் போட்டியில் இலங்கை அணியும், பங்களாதேஷும் மோதுகின்றன. செப்டம்பர் 19 ஆம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். அதற்கு முந்தைய நாள், தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. மறுநாளே பாகிஸ்தான் அணியுடன் இந்திய மோதுவது போல போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருப்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தும் அட்டவணை மாற்றப்படவில்லை.

Image result for rohit and virat

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் இருந்து விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

இதனையடுத்து சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் ரோஹித் சர்மாவிடன் கேள்வி கனைகளை தொடுத்து வருகின்றனர். ரோஹித் சர்மாவும் சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்து வருகிறார்.

Image result for ab de villiers


இதற்கு பதிலளித்துள்ள ரோஹித் சர்மா தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான ஏ.பி டிவில்லியர்ஸ் தான் இந்த தலைமுறையில் தான் பார்த்த சிறந்த கிரிக்கெட் வீரர் என்று பதிலளித்துள்ளார். 


Advertisement