விளையாட்டு

நேற்றைய ஆட்டத்தின் மூலம் புதிய படைத்த ரோஹித் சர்மா.! எந்தவொரு வீரரும் படைக்காத சாதனை.!

Summary:

நேற்றைய ஆட்டத்தின் மூலம் புதிய படைத்த ரோஹித் சர்மா.! எந்தவொரு வீரரும் படைக்காத சாதனை.!

ஐபிஎல் தொடரின் நேற்றய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. நேற்றய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ஓய்வெடுத்துக்கொண்ட மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கினார்.

நேற்றைய ஆட்டத்தில் 33 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மட்டும் 1,000 ஐபிஎல் ரன்கள் என்ற சாதனையை படைத்தார். குறிப்பிட்ட ஒரு ஐபிஎல் அணிக்கு எதிராக எந்தவொரு வீரரும் 1,000 ரன்கள் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement