இதுவரை யாரும் செய்யாத சாதனையை படைத்த ரோஹித் சர்மா.!

இதுவரை யாரும் செய்யாத சாதனையை படைத்த ரோஹித் சர்மா.!


rohit-sharma-new-record-79CQUX

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் களமிறங்கினர். 

நேற்றய ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய துவக்க வீரர் ரோஹித் ஷர்மா 161 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா அடித்த சதம் அவரது 7வது சதமாகும். இந்த சதத்தின் மூலம், இதுவரை யாரும் செய்யாத சாதனையையும் செய்துள்ளார் ரோகித் சர்மா.

rohit

இலங்கை, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகள் ஆகிய 3 வித ஃபார்மட்டிலும் சதம் அடித்துள்ள ஒரே வீரர் என்ற சதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.

15 மாதங்களுக்குப்பின் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரோஹித் சர்மா அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இந்திய மண்ணில் அடித்த 7-வது சதமாகும்.