ரசிகரின் செல்பிக்கு போஸ் கொடுத்த ரோஹித் ஷர்மா.! ரசிகர் செய்த செயலால் ரோஹித் சர்மாவுக்கு காத்திருந்த ஆப்பு.!

ரசிகரின் செல்பிக்கு போஸ் கொடுத்த ரோஹித் ஷர்மா.! ரசிகர் செய்த செயலால் ரோஹித் சர்மாவுக்கு காத்திருந்த ஆப்பு.!


rohit-sharma-isolation-for-break-the-rules

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 7-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. கொரோனா பரவல் அதிகரித்துவருவதால், ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி அங்கு கொரோனா விதிகளை பின்பற்றி விளையாடி வருகிறது. 

இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டில் இருந்து வரும் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பின் அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், தற்போது இந்திய அணி வீரர்களான ரோகித்சர்மா, ஷுப்மன் கில், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி ஆகியோர் கொரோனா விதிமுறைகளை மீறியதாக கூறி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

rohit

இந்திய அணியின் ரோகித் சர்மா காயம் காரணமாக சிகிச்சையில் இருந்தார். தற்போது பூரண குணமடைந்து ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மூன்றாவது டெஸ்ட்டுக்கு தயார்நிலையில் இருந்தார். இந்தநிலையில் தற்போது அவர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். புத்தாண்டு தினத்தையொட்டி இந்திய வீரர்கள் ரோகித்சர்மா, ஷுப்மன் கில், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி ஆகிய 5 பேர் ஒரு ஹோட்டலுக்குச் சென்று உணவு சாப்பிட்டு புத்தாண்டைக் கொண்டாடினர். 

அப்போது அங்கு வந்த இந்திய ரசிகர் ஒருவர் இந்திய வீரர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து செல்பி எடுத்துச் சென்றார். அந்த ரசிகர் அந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அந்த புகைப்படம் வைரலானதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ஐந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆகியவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன.