விளையாட்டு

நீங்க என்ன ஒதுக்குனாலும் நான் ரிலாக்ஸா தான் இருப்பேன்.. கடற்கரையில் மனைவியுடன் ரோகித்!

Summary:

இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாத போதிலும் ரோகித் சர்மா தனது மனைவியுடன் கடற்கரையில் உற்சாகமாக பொழுதினை கழித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணி வீரர்களின் பெயர் பட்டியல் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் மூன்று விதமான போட்டிகளிலும் ரோகித் சர்மாவின் பெயர் இடம்பெறாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான காரணத்தை தெரிவிக்காத பிசிசிஐ ரோகித் சர்மாவின் உடல்நிலை குறித்து மருத்து குழுவினர் தொடர்ந்து கண்கானித்து வருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் ரோகித் சர்மா காயத்திலிருந்து மீண்டு வலைப்பயிற்சி செய்த வீடியோ வெளியானது ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

ரோகித் சர்மாவிற்கும் விராட் கோலிக்கும் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் தான் அவரை அணியில் சேர்க்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக ரோகித் சர்மா மறைமுகமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ரோகித் சர்மா தனது மனைவியுடன் நேற்று மாலை கடற்கரையில் பொழுதினை கழித்துள்ளார். அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், "கடற்கரையில் அருமையான மற்றும் அமைதியான மாலைப்பொழுது" என குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

Nice and relaxed evening at the beach 😍

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on


Advertisement