கேதர் ஜாதவ் முகத்தில் அதை பூசிய ரோஹித் சர்மா! வெளியான வீடியோ

கேதர் ஜாதவ் முகத்தில் அதை பூசிய ரோஹித் சர்மா! வெளியான வீடியோ


rohit making fun on kedar jadav

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 14.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 105 ரன்களை பெற்று அமோக வெற்றி பெற்றதுடன் தொடரையும் வென்றது. இந்த ஆட்டம் மூன்றே மணி நேரத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

rohit making fun on kedar jadav

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது ரோஹித் சர்மா கேக்கை வெட்டினார். அப்போது அருகில் வந்த கேதர் ஜாதவுக்கு கேக்கை ஊட்டிய ரோஹித் அவரது முகத்தில் கேக்கை அப்பினார். இதனை கண்டு மற்ற வீரர்கள் அனைவரும் சிரித்தனர். அந்த வீடியோவை பிசிசிஐ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.