விளையாட்டு

தோனி ரசிகர்களை மிஞ்சும் அளவிற்கு ரோகித் சர்மா ரசிகர் செய்த செயல்.! வேற லெவல் வீடியோ.!

Summary:

14-வது ஐ.பி.எல் தொடரின் முதல் நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. அதில்,

14-வது ஐ.பி.எல் தொடரின் முதல் நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. அதில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதியது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் வரை ஆடிய பெங்களூர் அணி 8 விக்கெட்டை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்து மும்பை அணியை பெங்களூர் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

நேற்றைய போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தபோது துவக்க வீரராக களமிறங்கி ரோஹித் சர்மா பேட்டிங் செய்தபோது மும்பை ரசிகர் ஒருவர் தன்னுடைய வீட்டில் இருக்கும் டிவி முன்பு, ரோகித்சர்மாவை ஆர்த்தி எடுத்தார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இணையாவசிகள் சிலர் டோனி ரசிகர்களையே மிஞ்சும் அளவிற்கு இது இருக்கிறதே என்று குறிப்பிட்டு வருகின்றனர்.


Advertisement