விளையாட்டு

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்! என்ன சாதனை தெரியுமா?

Summary:

Risaph pant breaks dhonis record

நேற்று கயானாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் 65 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார் பண்ட். 

நேற்றைய ஆட்டத்தில் மூன்றாவது விக்கெட்டிற்கு கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்சர், 4 பவுண்டரிகள் அடங்கும். 

65 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டில் இங்கிலாந்திற்கு எதிராக தோனி அடித்த 56 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. 

இந்திய அணியில் தோனியின் இடத்தை ரிஷப் பண்ட் நிரந்தரமாக தக்க வைத்துகொள்ளும் அளவிற்கு நேற்று அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. 


Advertisement