“ரிங்கு சிங் இஸ் தி கிங்” : அமெரிக்க ஆபாச நடிகையின் பாராட்டில் அதிரும் ட்விட்டர்..!!

“ரிங்கு சிங் இஸ் தி கிங்” : அமெரிக்க ஆபாச நடிகையின் பாராட்டில் அதிரும் ட்விட்டர்..!!


Ringu Singh recorded by American porn actress Kendra Lust is now going viral.

அமெரிக்காவை சேர்ந்த ஆபாச நடிகை கேந்திரா லஸ்ட்  என்பவர் பதிவு செய்த கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

16 வது ஐ.பி.எல் டி-20 லீக் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி வரும் மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற 13 ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 204 ரன்கள் குவித்தது.

205 ரன்கள் மெகா இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 18.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், வெற்றிக்கு 8 பந்துகளில் 39 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ரிங்கு சிங் மீதம் இருந்த 2 பந்துகளில் தலா 1 சிக்ஸரும், 1 பவுண்டரியும் விளாசினார்.

இதன் பின்னர் கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உமேஷ் யாதவ் சிங்கிள் எடுக்க ரிங்கு சிங் பேட்டிங் முனைக்கு வந்தார். யஷ் தயாள் வீசிய கடைசி 5 பந்துகளையும் சிக்ஸர் விளாசிய அவர் கொல்கத்தா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

தான் சந்தித்த முதல் 14 பந்துகளில் வெறும் 8 ரன்கள் சேர்த்திருந்த ரிங்கு சிங், ஆட்டத்தின் இறுதியில் 21 பந்துகளை சந்தித்து 48 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அது முதல் அவரது பெயர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஆபாச நடிகை கேந்திரா லஸ்ட்  என்பவர், ரிங்கு இஸ் கிங் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதோடு ரிங்கு சிங்குடன் அவர் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அது இப்போது வைரலாகி வருகிறது.