அச்சச்சோ..!! என் மனைவி மட்டும் இத பார்த்தா!! கண்டிப்பா என்ன விவாகரத்து பண்ணிடுவா.. ரிக்கி பாண்டிங்கின் வைரல் வீடியோ..

அச்சச்சோ..!! என் மனைவி மட்டும் இத பார்த்தா!! கண்டிப்பா என்ன விவாகரத்து பண்ணிடுவா.. ரிக்கி பாண்டிங்கின் வைரல் வீடியோ..



Ricky pointing says his wife will divorce him viral video

முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் தற்போதைய டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் நேர்காணல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியா அணிக்கு பலமுறை உலகக்கோப்பை வாங்கி கொடுத்தவர்தான் முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங். தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், ஐபில் தொடரில் டெல்லி அணியின் பயிற்சியாளராகா செயல்பட்டுவருகிறார்.

அவரது தலைமையில் டெல்லி அணியும் சிறப்பாக ஆடி வருகிறது. இதனிடையே, ரிக்கி பாண்டிங் குறித்த வீடியோ ஒன்றை, டெல்லி அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பொதுவாக ரிக்கி பாண்டிங் எப்போதும் முகம் முழுவதும் முகசவரம் செய்துவிட்டு, மீசை தாடி இல்லாமல்தான் தோற்றமளிப்பார்.

ஆனால் டெல்லி அணியுடனான பயிற்சியின்போது அவர் லேசான தாடியுடன் காணப்பட்டார். இதனால் அவரிடம், நீங்கள் மீசை தாடி வைக்க ஆசைப்படுகிறீர்களா என கேட்கப்பட்டது.

Ricky pointing

இதற்கு சிரித்துக்கொண்ட பதிலளித்த ரிக்கி பாண்டிங், "இல்லை இல்லை. நான் தாடி வைத்திருப்பதை எனது மனைவி தொலைக்காட்சி வாயிலாக பார்த்துவிட்டால் நிச்சயம் என்னை விவாகரத்து செய்து விடுவார். எனவே இன்னும் சில நாட்களில் நான் மீண்டும் முழுவதுமாக முகசவரம் செய்துவிடுவேன்" என கூறியுள்ளார் ரிக்கி பாண்டிங்.