"எத்தனை சாதனைகள் இருந்தாலும் என்னுடைய ஒரே கனவு அதுதான்" ரோகித் ட்வீட்!

"எத்தனை சாதனைகள் இருந்தாலும் என்னுடைய ஒரே கனவு அதுதான்" ரோகித் ட்வீட்!


Rhot sharma's dream about worldcups

சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா. இவர் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக்கோப்பை தொடரில் 5 சதங்களை விளாசினார்.

ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த தொடரில் ரோகித் சர்மா 659 ரன்கள் எடுத்தார்.

Rohit sharma

ரோகித் சர்மா இலங்கைக்கு எதிராக 5 ஆவது சதத்தை விளாசி சாதனை படைத்து நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்தது. இதனை நினைவு கூறும் வகையில் பிசிசிஐ ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது.

இதற்கு பதிலளித்துள்ள ரோகித் சர்மா, "அந்த தொடர் முடிந்ததை விட இன்னும் முன்னேறி செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். எதுவாக இருந்தாலும் என்னுடைய ஒரே கனவு உலகக்கோப்பைகளை வெல்வதே" என பதிவிட்டுள்ளார்.