விறுவிறுப்பான 7 ஆட்டங்கள்! ப்ளேஆஃப் சுற்றிற்கு முன்னேர யாருக்கு வாய்ப்பு? ஒரு புள்ளிவிவரம்

விறுவிறுப்பான 7 ஆட்டங்கள்! ப்ளேஆஃப் சுற்றிற்கு முன்னேர யாருக்கு வாய்ப்பு? ஒரு புள்ளிவிவரம்


report-who-can-be-the-next-2-teams-into-playoff

விறுவிறுப்பான 7 ஆட்டங்கள்! ப்ளேஆஃப் சுற்றிற்கு முன்னேர யாருக்கு வாய்ப்பு? ஒரு புள்ளிவிவரம்

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கடைசி கட்டத்தை நோக்கி நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை அனைத்து அணிகளும் தலா 12 போட்டிகளில் வென்றுள்ளன. 

இதில் 16 புள்ளிகளுடன் சென்னை மற்றும் டெல்லி அணிகள் ப்ளேஆஃப் சுற்றிற்கு தகுதிபெற்றுள்ளன. வெறும் 8 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி ப்ளேஆஃப் சுற்றிற்கு செல்லும் தகுதியை இழந்துவிட்டது. 

IPL 2019

இன்னும் மீதமுள்ள போட்டிகளில் ப்ளேஆஃப் சுற்றிற்கு முன்னேர போகும் அடுத்த இரண்டு அணிகள் என்னென்ன என்பதனை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கிவிட்டது. முதல் சுற்றில் அனைத்து அணிகளுக்கும் இன்னும் தலா இரண்டு போட்டிகளே உள்ளன. 

இதில் அடுத்து உள்ள மொத்தம் 8 போட்டிகளில் சென்னை vs டெல்லி போட்டியை தவிர மற்ற 7 போட்டிகளும் மிகவும் முக்கியமான போட்டிகள் ஆகும். இந்த போட்டிகளின் மூலம் யார்யாருக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதனை இங்கே பார்ப்போம்:

மும்பை:

IPL 2019
14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் மும்பை அணி அடுத்து ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுடன் மோதவுள்ளன. முதலில் ஆடப்போகும் ஹைதராபாத் அணியில் வார்னர் மற்றும் பெயர்ஸ்டோவ் இல்லாததால் மும்பை அணி எளிதில் வென்று ப்ளேஆஃப் சுற்றிற்கு முன்னேறிவிடும். ஒருவேளை அந்த ஆட்டத்தில் தோற்றால் அடுத்து கொல்கத்தாவுடன் நிச்சயம் வென்றே தீர வேண்டும். 

ஹைதராபாத்:

IPL 2019
12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் இந்த அணி ப்ளேஆஃப் சுற்றிற்கு முன்னேற அடுத்து ஆடவிருக்கும் போட்டிகளில் மும்பை அல்லது பெங்களூருவை நிச்சயம் அதிகமான ரன் வித்தியாசத்தில் வென்றே தீர வேண்டும். இரண்டு போட்டிகளிலும் வென்றால் எளிதாக உள்ளே செல்ல முடியும். ஆனால் ஹைதராபாத் ஒரு போட்டியில் மட்டும் வென்றால், மும்பை அணி இரண்டு போட்டிகளிலும் மோசமாக தோல்வியுற வேண்டும். 

கொல்கத்தா:

IPL 2019
5 போட்டிகளில் வென்றுள்ள கொல்கத்தா அடுத்த இரண்டு போட்டிகளிலும் (vs பஞ்சாப், மும்பை) அதிகமான ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அதேசமயம் ஹைதராபாத் அணி இரண்டு போட்டிகளிலும் தோற்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஏதாவது ஒரு போட்டியில் தோற்க வேண்டும்.

பஞ்சாப்:

IPL 2019
5 போட்டிகளில் வென்றுள்ள இந்த அணியும் அடுத்த இரண்டு போட்டிகளில் (vs கொல்கத்தா, சென்னை) நிச்சயம் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த அணிக்கு கொல்கத்தாவை வெல்வது என்பது கடினமான ஒன்று தான். ஆனால் ஒருவேளை கொல்கத்தா மற்றும் சென்னையை பஞ்சாப் வீழ்த்த, கொல்கத்தா மும்பையிடமும் தோற்க, ஹைதராபாத் அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோற்றால் பஞ்சாப் அணிக்கு உள்ளே நுழைய வாய்ப்பு கிடைக்கும். 

ராஜஸ்தான்:

IPL 2019
5 போட்டிகளில் வென்றுள்ள இந்த அணி அடுத்த இரண்டு போட்டிகளில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளை நிச்சயம் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். மேலும் ஹைதராபாத் இரண்டு போட்டிகளிலும் தோற்று கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் ஏதாவது ஒரு போட்டியில் தோற்க வேண்டும். 

இனிவரும் போட்டிகளில் ஹைதராபாத் அணி சற்று வலுவிழந்து இருக்கும் என்பதால் மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய இரண்டு அணிகளுக்கும் ப்ளேஆஃப் சுற்றிற்கு முன்னேர அதிகமான வாய்ப்பு இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை எப்போதும் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.