வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
இறுதிவரை திக் திக்... பரபரப்பான ஆட்டத்தால் ராயலாக 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது பெங்களூரு அணி.!
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேற்று மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக கேப்டன் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். மொஹ்சின் கான் வீசிய பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் டு பிளெசிஸ். அவரை தொடர்ந்து ரஜத் படிதார் களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த கோலி 24 பந்துகளில் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
ரஜத் படிதர், லக்னோ அணியின் பந்து வீச்சாளர்களின் பந்தை மைதானத்தின் அனைத்து பக்கங்களுக்கும் சிதறடித்தார். அவர் எதிர்கொண்ட 54 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசி 112 ரன்களை குவித்தார், இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 207 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்து இருந்தது. 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் குயின்டன் டி காக், சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மனன் வோரா 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 58 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்தார். இறுதியில் 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து லக்னோ அணியால் வெறும் 193 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது.