தனி ஒருவனாக தருமாறு சம்பவம் செய்த ஏபிடி.! இறுதியில் திக்..திக் வெற்றி.!

தனி ஒருவனாக தருமாறு சம்பவம் செய்த ஏபிடி.! இறுதியில் திக்..திக் வெற்றி.!


rcb-won-mumbai-indians

2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி  நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கிய மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

rcbஇதனையடுத்து 160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கமிறங்கிய பெங்களூரு அணியில், கேப்டன் விராட் கோலியும், வாஷிங்டன் சுந்தரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். வாசிங்டன் சுந்தர் 10 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். விராட் கோலி - மேக்ஸ்வெல் இருவரும் பட்னர்ஷிப் சேர்ந்து சிறப்பாக ஆடிய  நிலையில் விராட் கோலி 33 ரன்களுக்கும், அதன்பின் மேக்ஸ்வெல் 39 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

rcb

கடைசியில் சிறப்பாக ஆடி அதிரடி காட்டிய ஏபிடி வில்லியர்ஸ் பெங்களூர் அணியை சரிவில் இருந்து மீட்டார். வெறும் 27 பந்துகளில் ஏபிடி வில்லியர்ஸ் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 20 ஓவர்கள் வரை ஆடிய பெங்களூர் அணி 8 விக்கெட்டை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்து மும்பை அணியை பெங்களூர் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.