இந்தியா விளையாட்டு

தோல்வி அடைந்த அணைத்து ஆட்டத்திற்கும் பதிலடி கொடுத்த விராட் கோலி, டிவில்லியர்ஸ்! துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!

Summary:

rcb vs KKR

ஐபிஎல் சீசன் 12 தற்போது நடைபெற்று வருகிறது. 2019 ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகிறது. இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கின்றது பெங்களூர் அணி. 

இந்நிலையில் இன்றைய போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில்  டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பார்திவ் படேல் மற்றும் விராட் கோலி சிறப்பாக ஆடினர். பார்திவ் படேல் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

bangalore vs kkr 2019 க்கான பட முடிவு

இதனையடுத்து அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் களமிறங்கி பந்துகளை நாலாபக்கமும் பறக்கவிட்டார். இதுவரை தொடர் தோல்வியை சந்தித்த பெங்களூரு அணியை மீட்டெடுக்கும் நோக்கில் விராட் மற்றும் டீவில்லியர்ஸ் ஆடினர்.

அதிரடியாக ஆடிய விராட் கோலி 49 பந்துகளில் 84 ரன்களும், டிவில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நீண்ட நண்ட்களுக்கு பிறகு விராட் மிகவும் சிறப்பாக ஆடியுள்ளார் இந்த போட்டியில். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் பறிகொடுத்து 205 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்கு 206 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

virat and devillers க்கான பட முடிவு


Advertisement