இந்தியா விளையாட்டு

முக்கிய வீரரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே, ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும் போட்டி.! இறுதியில் தட்டி தூக்கிய ஆர்.சி.பி.!!

Summary:

14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக

14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கியுள்ளது.

மேக்ஸ்வெல் 2014 ஐபில்லிற்கு பிறகு எந்த சீசனிலும் சரியாக ஆடவில்லை என்றே கூறலாம். ஆனால்  மேக்ஸ்வெல்லுக்கான விலை மட்டும் குறையவே இல்லை. அதற்கு முக்கிய காரணம் மேக்ஸ்வெல்லின் சர்வேதேச போட்டிகளில் அவரது ஆட்டத்தை பார்த்து தான் ஒவ்வொரு தடவையும் எல்லா டீமும் அதிக பணம் கொடுத்து எடுக்க தயாராக இருந்தார்கள்.

அதேபோல் இந்தவருடம் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மேக்ஸ்வெலை வாங்குவதற்கு தயாராக இருந்தார்கள். சிஸ்கேவுக்கு 5வது பொஷிசனுக்கு எப்படி ஒரு பவுர்புல் பேட்ஸ்மேன் தேவையோ அதேபோல ஆர்சிபிக்கும் ஒரு பேட்ஸ்மேன் தேவையாக இருந்தது.

இந்தநிலையில்,சென்னையில் நடந்து வரும் 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க ஆர்சிபி அணிக்கும், சிஎஸ்கே அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணி வாங்கியுள்ளது. ஏற்கனவே ஆர்சிபி அணியில் விராட்கோலி, ஏ. பி. டி, கெயிலுக்கு அப்புறம் மேலும் கிடைத்த சிறந்த வீரர் என்றே மேக்ஸ்வெல்லை கூறலாம்.


Advertisement