சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை கட்டியணைத்து மகிழ்ந்த பெங்களூரு கேப்டன் டூபிளெஸ்ஸிஸ்.! வைரல் வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை கட்டியணைத்து மகிழ்ந்த பெங்களூரு கேப்டன் டூபிளெஸ்ஸிஸ்.! வைரல் வீடியோ


rcb captain happy with csk players

2022 ஐ.பி.எல் தொடரின் 22-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது. தொடர் தோல்விகளுக்கு பின்னர் நேற்றைய ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

நேற்றய ஆட்டம் துவங்குவதற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணித்தலைவர் டூபிளெஸ்ஸிஸ், சென்னை அணியினரை பார்த்தவுடன் கட்டியணைத்த வீடியோ ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த தென் ஆப்பிரிக்க வீரர் டூபிளெஸ்ஸிஸ், நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு தலைமை தாங்கி வருகிறார்.


நேற்றைய ஆட்டத்திற்கு முன்பு மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டபோது பெங்களூர் அணி வீரர்கள் பயிற்சிக்காக அங்கு சென்றனர். அப்போது சென்னை அணியை கண்டவுடன் உற்சாகமடைந்த டூபிளெஸ்ஸிஸ், ஓடிவந்து அந்த அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங்கை கட்டியணைத்தார். பின்னர் அணைத்து வீரர்களையும் சந்தித்து கைகுலுக்கி கட்டியணைத்து மகிழ்ந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.