பளார்., பளாரென்று 4 முறை... முன்னாள் கிரிக்கெட் வீரரின் கன்னத்தை பதம்பார்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்..!

பளார்., பளாரென்று 4 முறை... முன்னாள் கிரிக்கெட் வீரரின் கன்னத்தை பதம்பார்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்..!


rajasthan-royals-owner-slapped-ross-taylor

நியூசிலாந்தின் கேப்டன் ராஸ் டெய்லர் ஐபிஎல் 2011 சீசனில் டக் அவுட் ஆனதற்காக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் 3-4 முறை அவரை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர். இவர் எழுதிய ராஸ் டெய்லர்: பிளாக் அண்ட் ஒயிட் என்ற சுயசரிதை புத்தகம் பல தரப்பிலும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

Rajasthan royels

கடந்த ஐபிஎல் 2011 சீசனில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை அதில் குறிப்பிட்டுள்ளார். அதில் "எங்களுக்கு டார்கெட் 195. ஆனால் நான் டக் அவுட்டாகி வெளியேறினேன். இதனால் எங்களது அணி இலக்கை நெருங்கவில்லை. தோல்வி அடைந்தோம். 

அணி வீரர்கள், நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஹோட்டல் மேற்பரப்பில் உள்ள பாரில் இருந்தபோது, ராஜஸ்தான் அணி உரிமையாளர்களில் ஒருவர் என்னிடம் வந்து ராஸ், 'டக்கவுட் ஆவதற்காக நாங்கள் உங்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் கொடுக்கவில்லை' எனக் கூறி கன்னத்தில் 3-4 முறை அறைந்தார்.

Rajasthan royels

அதன் பின் நான் சிரித்தேன். அதிகளவு வலி தந்த அறைகள் அது அல்ல. விளையாட்டு - நடிப்பு என்று எனக்கு தெரியவில்லை. அந்த சூழ்நிலையில் நான் அதை பிரச்சினையாக்கவும் விரும்பவில்லை. பல விளையாட்டுகளில் இது நடப்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.