ஜடேஜாவை ஓடும் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்ட வார்னே; அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா?

ஜடேஜாவை ஓடும் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்ட வார்னே; அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா?



rajastan rayles - shane warne - ravendra jadeja

இந்திய அணியின் வீரரான ரவீந்திர ஜடேஜாவை ஓடும் பேருந்திலிருந்து இறக்கிவிட்டது குறித்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே ‘நோ ஸ்பின்’ (No Spin) என்ற தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் தலைசிறந்த சுழற் பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஷேன் வார்னே. தனது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை ‘நோ ஸ்பின்’ என்ற சுயசரிதை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் ஐபிஎல் போட்டியின்போது ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் அவர் சந்தித்த சவால்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.

tamilspark

அதில், இந்திய அணியின் வீரரான முனாஃப் படேல் தனது எளிமையான புன்சிரிப்புடன் கூடிய நடவடிக்கைகளோடு அவரைக் கவர்ந்தது. அதே நேரத்தில் முகமது கைப் தான் தங்குவதற்கு பெரிய அறை வேண்டும் என்று வாதிட்டதையும் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்த புத்தகத்தில், தற்போது இந்தியாவின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழும் ரவீந்தர ஜடேஜாவைப் பற்றி குறிப்பிட்டுள்ள வார்னே, “ஜடேஜா விளையாடிய விதமும் அவரின் உற்சாகமும் எங்களுக்கு அவரை மிகவும் பிடித்தவராக்கியது. ஆனால், அவர் ஒழுக்கமில்லாமல் நடந்து கொண்டது பிரச்சனையாக இருந்தது. இதுபோன்ற பிரச்சனைகள் இளம் வீரர்களை தவறாக வழிநடத்தும்.

tamilspark

ஒரு சில விஷயங்களை நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால், காலதாமதமாக வருவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். முதல் முறை, பேக் மற்றும் உபகரணங்களில் குழப்பம் இருந்தததால் லேட் ஆனது, அதை நான் ஏற்றுக்கொண்டேன். இரண்டாவது முறையும் லேட்டாகவே வந்தார். டீம் பஸ் 9 மணிக்கு கிளம்பும், ரவி லேட்டாக வருவார். இதனால், அவரை விட்டுவிட்டே கிளம்புவோம். இதனால், அவர் தாமாகவே மைதானத்திற்கு வரவேண்டி இருந்தது.

ஒரு முறை, பயிற்சி முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பும்போது, பேருந்தை பாதியிலேயே நிறுத்தி, லேட்டாக வந்ததால் ஜடேஜாவை கீழே இறங்கி நடந்து வரும்படி கூறினேன். அப்போது, ஜடேஜா உடனிருந்த மற்றொரு இளம் வீரர் அவரை கிண்டல் செய்ததால், அவரையும் கீழே இறங்க சொன்னேன். அந்த சம்பவத்திற்குப் பிறகு யாரும் காலதாமதமாக வரவில்ல்லை” என தெரிவித்துள்ளார்.