விளையாட்டு

ஓய்வினை அறிவித்த பிறகு தோனியும் ரெய்னாவும் என்ன செய்துள்ளனர் தெரியுமா?

Summary:

Raina shared the moments after dhoni and his retirement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15 தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து தோனியின் நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வினை அறிவித்தார்.

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்குபெறுவதற்காக தற்போது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தோனி மற்றும் ரெய்னா இருவரும் சென்னையில் இருந்துகொண்டு தான் தங்களது ஓய்வு குறித்த தகவலினை வெளியிட்டனர்.

இதுகுறித்து பேசியுள்ள சுரேஷ் ரெய்னா, "தோனி தனது ஓய்வு குறித்த தகவலினை வெளியிட்டதும் என்னை கட்டி அணைத்து சிறிது நேரம் அழுதார். அதன் பின்னர் சிஎஸ்கே வீரர்களுடன் நேரத்தை செலவிட்டோம் மாலையில் ஒரு பார்ட்டியிலும் கலந்துகொண்டோம்" என கூறியுள்ளார்.

தோனி, ரெய்னா இருவரும் ஒரே நாளில் ஒரே இடத்தில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் ஏற்கனவே திட்டமிட்டு தான் இவ்வாறு செய்துள்ளனர் என ரசிகர்கள் மத்தியில் பேசி வருகின்றனர்.


Advertisement