விளையாட்டு

தோனியால் ஏற்பட்ட சோகம் மறைவதற்குள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி!

Summary:

Raina retires from international cricket followed by dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று மாலை 19.29 மணி முதல் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தோனியை தொடர்ந்து இந்திய அணியில் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக பல வருடங்கள் விளையாடிய சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். ஒரே நாளில் இருபெரும் ஜாம்பாவான்கள் ஓய்வு பெற்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற தோனி கடைசியாக இந்திய அணிக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றார். சுரேஷ் ரெய்னா கடைசியாக இந்திய அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு விளையாடினார்.

தற்போது தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளனர். இதுதான் இவர்களின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமோ என்ற கவலையும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.


Advertisement