வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
இப்படியும் ஒரு கேப்டனா! அணியின் முக்கிய வீரரின் பெயரை கூட மறந்த ரெய்னா
2019 ஐபிஎல் தொடரின் 44ஆவது ஆட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி, ஜடேஜா மற்றும் டூ ப்ளஸிஸ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டிக்கு சென்னை அணியின் துணைக் கேப்டனான சுரேஷ் ரெய்னா தலைமையேற்றுள்ளார்.

ஆட்டத்தின் துவக்கத்தில் டாஸ் சுழற்சிக்காக சென்னை அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா மற்றும் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் வந்தனர். டாஸ் வென்ற ரெய்னா முதலில் பந்துவீசுவதாக முரளி கார்த்திக்கிடம் கூறினார்.
பின்னர் இரணட்டு கேப்டன்களிடமும் மாறி மாறி பேசிய முரளி கார்த்திக் சென்னை அணியில் எந்தெந்த வீரர்கள் நீக்கப்பட்டு, யாருக்கு வாய்ப்பு வழங்கப்படுள்ளது என கேள்வி கேட்டார். அப்போது பதிலளித்த ரெய்னா, தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருப்பதாக தெரிவித்தார்.
அதன் பின்பு மூன்றாவதாக நீக்கப்பட்ட டூ ப்ளஸிஸின் பெயரை மறந்துவிட்டார் போல. அவரது பெயரை ரெய்னாவால் கூற முடியவில்லை. ஒரு கேப்டனாக பொறுப்பில் இருக்கும் ரெய்னாவிற்கு அணியின் முக்கிய வீரரின் பெயரை கூட ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லையா என்று ரசிகர்கள் சங்கடத்திற்கு ஆளாகினர்.