3 வது வெற்றியை பெறுமா பெங்களூரு..?!! பஞ்சாப் அணியுடன் இன்று பலப்பரீட்ச்சை..!!

3 வது வெற்றியை பெறுமா பெங்களூரு..?!! பஞ்சாப் அணியுடன் இன்று பலப்பரீட்ச்சை..!!



punjab-kings-vs-bengaluru-royal-challengers-will-face-e

மொகாலியில் இன்று நடைபெறும் 27 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 26 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. மொகாலியில் இன்று நடைபெறும் 27 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்ற பஞ்சாப் அணி  அவற்றில் கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோ அணிகளுக்கு எதிராக தலா 1 வெற்றியும், ஐதராபாத், குஜராத் அணிகளுக்கு எதிராக தோல்வியும் பெற்று 6 புள்ளிகளுடன் 5 வது இடத்தை பிடித்துள்ளது. தோள்பட்டை காயத்தால்  கடைசி போட்டியில் விலகிய கேப்டன் ஷிகர் தவான் இந்த போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

இதுவரை  5 போட்டிகளில் பங்கேற்ற பெங்களூரு அணி, மும்பை, டெல்லி அணிகளுக்கு  எதிராக தலா 1 வெற்றியும்,  கொல்கத்தா, லக்னோ, சென்னை அணிகளுக்கு எதிராக தோல்வியும் பெற்று 4 புள்ளிகளுடன் 8 வது இடத்தை பிடித்துள்ளது.  கடந்த போட்டியில்  சென்னை அணிக்கு எதிராக 227 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

உள்ளூரில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணி ஆதிக்கம் செலுத்தும், புள்ளி பட்டியலில் முன்னேற வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு அணி மல்லுக்கட்டும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இராது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 30 போட்டிகளில் மோதியுள்ளன அவற்றில் பஞ்சாப் 17, பெங்களூரு 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் மோதிய கடைசி 6 போட்டிகளிலும் பஞ்சாப் அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.