சிகிச்சைக்காக அயல்நாட்டிற்கு செல்கிறார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா!

சிகிச்சைக்காக அயல்நாட்டிற்கு செல்கிறார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா!



pumra will got england for treatment


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளார். பும்ராவிற்கு முதுகில் ஏற்பட்டுள்ளதால் விலகியுள்ளார். இந்தநிலையில் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் பும்ராவிற்கு முதுகில் சிறிய காயம் ஏற்பட்டது குறித்து பிசிசிஐ கூறுகையில், பும்ரா காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார். பும்ரா, பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக் கெட் அகாடமியில் காயம் குணமடையும் வரை கண்காணிப்பில் இருப்பார். மேலும் பிசிசிஐயின் மருத்துவக் குழு பும்ராவின் காயத்தை கண்காணிக்கும் என தெரிவித்தது.

Pumrah

இந்தநிலையில் முதுகில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து செல்ல இருக்கிறார். அவர் 2 மாதங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் தற்போது ஓய்வில் இருப்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.