விளையாட்டு

சச்சின், விராட் கோலி இவர்களில் சிறந்த பேட்ஸ்மேன் யார்? யுவராஜின் கேள்விக்கு பதிலளித்த பும்ரா!

Summary:

Pumra talk about sachin and virat


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலக்கட்டத்தில் தனது முந்தைய அனுபவங்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகிறார்.

பல நாடுகளுக்குச் சென்று விளையாடி வந்த இந்திய அணி தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து வீரர்களும் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர். இந்நிலையில்  பும்ராவிடம் இன்ஸ்டா மூலம் பேசிய யுவராஜ், மிடில் ஆர்டரில் சிறந்த பேட்ஸ்மேன் நானா? தோனியா? என்ற கேள்விக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பும்ரா தடுமாறினார்.

ஆனாலும் வித்தியாசமான பதிலை பும்ரா தெரிவித்துள்ளார். அந்தக் கேள்விக்கு பதில் அளித்த பும்ரா, உங்கள் இருவரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்பது, அம்மா, அப்பாவில் சிறந்தவர் யார் என்று கேட்பது போல உள்ளது எனக்கூறி பும்ரா சமாளித்தார்.


இதனையடுத்து, விராட் கோலி அல்லது சச்சின் தெண்டுல்கர் இவர்களில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று யுவராஜ் சிங் கேட்டார். அதற்கு பதில் அளித்த பும்ரா, நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி 4 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு எனக்கு போதுமான அனுபவம் இல்லை. விராட், தெண்டுல்கர், அவர்கள் என்னை விட நிறைய கிரிக்கெட் விளையாடியதால் நான் அந்த நிலையில் இல்லை, என்று பதிலளித்து பும்ரா சமாளித்துள்ளார்.


Advertisement