ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் இருவரையும் தட்டி தூக்கிய பும்ரா.! தடுமாறும் ஆஸ்திரேலியா.!

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் இருவரையும் தட்டி தூக்கிய பும்ரா.! தடுமாறும் ஆஸ்திரேலியா.!


pumra-got-two-wicket

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில்  20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில்T20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 

இதனையடுத்து இரு அணிகள் மோதும் 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று டிசம்பர் 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

test

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 89 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணி 244 ரன்களை எடுத்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களாக மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.

நிதானமாக ஆடிய துவக்க வீரர்கள் இருவரையும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா எல்.பி.டபுள்யூ ஆக்கி வீழ்த்தினார். ஆரம்பத்திலே இரண்டு முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அட்டமிழகச்செய்தது. இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இதனையடுத்து அஸ்வின் ஸ்டீவன் ஸ்மித் விக்கெட்டை எடுத்தார். தற்போது மர்னஸ் லபுஸ்சாக்னே மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும்  ஆடி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி 29 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆடிவருகிறது.