இப்படி கூட பயிற்சி எடுக்க முடியுமா!! அதிகாலை 3 மணிக்கே வரசொல்லிடுவாரு!! நாங்களும் போவோம்!! வெறியோடு காத்திருக்கும் ப்ரித்விஷா..Prithci shaw starts training from morning 3 AM

டெல்லி அணியின் இளம் வீரர் ஒருவர் குறித்து பல்வேறு தகவல்களை கூறியுள்ளார் டெல்லி அணியின் பயிற்சியாளர்.

ஐபில் T20 போட்டிகள் நாளை மறுநாள் தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரண்டாவது நாள் ஆட்டத்தில் சென்னை அணி டெல்லி அணியுடன் விளையாடுகிறது. இந்நிலையில் ஐபில் கோப்பையை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.

இந்நிலையில் டெல்லி அணியின் இளம் வீரர் ப்ரித்விஷா குறித்து பல்வேறு முக்கிய தகவல்களை கூறியுள்ளார் டெல்லி அணியின் பயிற்சியாளர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ப்ரித்விஷா 0, 4 என சொற்ப ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.

prithvi shaw

இதனால் இவருக்கு அடுத்தடுத்து போட்டிகளில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. மேலும் இவர் மீது பல்வேறு விமர்சனங்களுக்கும் எழுந்தது. இதனால் மனவேதனை அடைந்தப்ரித்விஷா, அதற்கு அடுத்ததாக நடந்த உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

தற்போது நல்ல பார்மில் இருக்கும் இவர் வரவிருக்கும் ஐபில் தொடரில் மிக சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐபில் தொடரில் சிறப்பாக விளையாடினாள் அடுத்தாக வரவிற்கும் உலகக்கோப்பை T20 தொடரில் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐபில் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காகவும், அடுத்ததாக வரவிருக்கும் T20 உலக கோப்பையில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், பிரத்விஷா தற்பொழுது அதிகமான நேரங்கள் பயிற்சியில் ஈடுபடுத்திக் கொட்டிருப்பதாகவும், அதிகாலை 3 மணிக்கே தன்னை வரச்சொல்லி பந்துகளை வீச செய்து அவர் பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு நாங்களும் ஒத்துழைகிறோம் என கூறியுள்ளார் டெல்லி அணியின் பயிற்சியாளர்.