விளையாட்டு

அய்யோ பாவம்..! ஹாட்ரிக் விக்கெட் வீழத்திய அடுத்த ஓவரிலேயே பொழந்து கட்டிய பொல்லார்ட்

Summary:

ஹாட்ரிக் விக்கெட்டினை வீழ்த்திய பின்பு அடுத்த ஓவரிலேயே 6 பந்துகளில் 6 சிக்சர்களை விட்டுக்க

ஹாட்ரிக் விக்கெட்டினை வீழ்த்திய பின்பு அடுத்த ஓவரிலேயே 6 பந்துகளில் 6 சிக்சர்களை விட்டுக்கொடுத்துள்ளார் தனஞ்ஜெயா.

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் எடுத்தது.

நான்காவது ஓவரினை வீசிய இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தனஞ்ஜெயா லீவிஸ், கெய்ல் மற்றும் பூரன் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி சிறிது நேரமே நிலைத்தது.

அடுத்து களமிறங்கிய பொல்லார்ட் தனஞ்ஜெயா வீசிய அடுத்த ஓவரிலேயே 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசி சாதனை படைத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 13.1 ஓவரிலேயே 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Advertisement