மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசலா.. பொல்லார்ட்டின் சர்ச்சைக்குரிய பதிவால் ரசிகர்கள் கலக்கம்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசலா.. பொல்லார்ட்டின் சர்ச்சைக்குரிய பதிவால் ரசிகர்கள் கலக்கம்!


pollard-comment-on-insta-goes-viral

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய துருப்பு சீட்டாக இருப்பவர் ஆல் ரவுண்டர் பொல்லார்ட். காயம் காரணமாக ரோஹித் சர்மா ஓய்வில் இருந்த சமயத்தில் மும்பை அணியினை சிறப்பாக வழிநடத்தி பிலே ஆப் சுற்றுக்கு முன்னேற செய்தார் பொல்லார்ட்.

கடைசி லீக் போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியதால் கேப்டனாக ரோஹித் ஷர்மாவே செயல்பட்டார். மும்பை அணி அந்த போட்டியில் தோல்வியை தழுவினாலும் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டது.

pollard

இந்த சூழலில் மும்பை அணியின் பொல்லார்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில் அவர், "என்னை எதிரி என நேரடியாக தெரிவிப்பவர்களை விட நண்பனாக பழகி ரகசியமாக குழி பறிப்பவர்களே அதிகம்" என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் பொல்லார்ட் யாரை பற்றி குறிப்பிடுகிறார் என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பதவி ஹோல்டரிடம் சென்றதால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என சிலர் கூறுகின்றனர். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார் எனவும் சிலர் கூறுகின்றனர்.