பிரபல கிரிக்கெட் வீரருக்கு பிறந்த 5வது பெண் குழந்தை! பெயர் வைக்க ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

பிரபல கிரிக்கெட் வீரருக்கு பிறந்த 5வது பெண் குழந்தை! பெயர் வைக்க ரசிகர்களுக்கு வேண்டுகோள்!


paklistan player got new baby

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி ஒரு நாள் போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர் (351 சிக்சர்) என்ற சிறப்புக்குரியவர் சாகித் அப்ரிடி. 

சாகித் அப்ரிடி கடந்த 2017-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அப்ரிடி தற்போது 20 ஓவர் மற்றும் 10 ஓவர் லீக் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். 39 வயதான அப்ரிடிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவரது மனைவி மீண்டும் கர்ப்பமடைந்தார். 

Afridi

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சாகித் அப்ரிடியின் மனைவிக்கு இரண்டு  தினங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து சாகித் அப்ரிடி, அவரது டுவிட்டர் பக்கத்தில், "கடவுளின் எல்லையில்லா ஆசியும், கருணையும் என் மீது இருக்கிறது. ஏற்கனவே எனக்கு 4 அற்புதமான மகள்கள் தந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு மகள் மூலம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எனது மகள்களின் பெயர் அக்சா, அன்ஷா, அஜ்வா, அஸ்மரா. இந்த வரிசையில் புதிய வரவான 5-வது மகளுக்கும் ஆங்கில வரிசையில் ‘ஏ’ எழுத்தில் தொடங்கும் பெயரை சூட்ட விரும்புகிறேன். எனவே பொருத்தமான பெயரை தேர்வு செய்து நீங்கள் எனக்கு அனுப்பி வையுங்கள் என்று அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.