பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சியில் ஈடுபட அனுமதி ரத்து! என்ன காரணம் தெரியுமா.?

பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சியில் ஈடுபட அனுமதி ரத்து! என்ன காரணம் தெரியுமா.?



pakistan player affected by corona

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 இருபது ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் T20 போட்டி அடுத்த மாதம் 18 -ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெற உள்ளது. நியூசிலாந்தில் கொரோனா பாதுகாப்பு வளையத்தினுள் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் வீரர்களில் 6 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

பாகிஸ்தான் வீரர்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே வெளியான கொரோனா பரிசோதனை முடிவுகளில் 6 வீரர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அந்த வீரர்கள் தனியாக ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Pakistan

இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் இன்று 7-வது வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வீரர் ஏற்கெனவே சிகி்ச்சையில் இருக்கும் வீரர்களுடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் குழுவாக பயிற்சியில் ஈடுபடுவதற்கு நியூஸிலாந்து சுகாதாரத்துறை அனுமதியளி்த்திருந்தது. ஆனால், ஹோட்டலில் கொரோனா தடுப்பு விதிகளைகளை மீறிய பாகிஸ்தான் அணியினர் ஹோட்டலில் சுதந்திரமாக நடமாடுவதும், உணவுகளை பரிமாறிக்கொள்வதும் கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.

இதையடுத்து, பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சிக்கான அனுமதியையும் நியூஸிலாந்து அரசு ரத்து செய்துள்ளது. மேலும், தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் இதேபோன்று விதிமுறைகளை மீறி நடந்தால், நியூஸிலாந்திலிருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.