நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர்களை பழி தீர்த்த பாகிஸ்தான் ரசிகர்கள்.! வைரல் வீடியோ

நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர்களை பழி தீர்த்த பாகிஸ்தான் ரசிகர்கள்.! வைரல் வீடியோ



pakistan-fans-blame-new-zealand-players

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 லீக் போட்டியில் நேற்று பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. நேற்றைய ஆட்டத்தில் அணி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து  5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. நேற்று ஷார்ஜாவில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெறும் தருவாயில் இருந்த போது மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் ‘செக்யூரிட்டி.. செக்யூரிட்டி’ கோஷமிட்டு நியூசிலாந்து அணியை பழிதீர்த்தனர். 

கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி, போட்டி தொடங்கும் சில மணிநேரங்களுக்கு முன் ‘பாதுகாப்பு’ பிரச்சினை இருப்பதாக காரணம் கூறி பாகிஸ்தானுடனான தொடரை ரத்து செய்து மறுநாளே நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.