விளையாட்டு WC2019

இந்திய ரசிகர்களை மறைமுகமாக தாக்கி பேசிய பாக்கிஸ்தான் கேப்டன்! என்ன சொன்னாரு தெரியுமா?

Summary:

Pakistan captain hurts indian fans indirectly

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி குறித்து பேசும் பொழுது பாகிஸ்தான் அணியின் கேப்டன் இந்திய ரசிகர்களை மறைமுகமாக தாக்கி உள்ளார்.

இன்று நடைபெறும் போட்டி குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் சர்ப்ராஸ் அஹமத். அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் "நாளைய போட்டியின்போது இந்திய ரசிகர்களைப் போல பாகிஸ்தான் ரசிகர்கள் ஸ்மித் மற்றும் வார்னரை தகாத முறையில் பேசினாள் விராட் கோலியை போல நீங்களும் பாகிஸ்தான் ரசிகர்களை அமைதி படுத்துகிறீர்களா?" எனக் கேட்டார்.

இதற்கு பதிலளித்த சர்பராஸ் அகமத் "பாக்கிஸ்தான் மக்கள் அதைப் போன்று தகாத செயல்களை செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பாக்கிஸ்தான் மக்கள் கிரிக்கெட்டை போட்டியை மிகவும் நேசிக்கிறார்கள். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு அளிப்பதையே விரும்புவார்கள்" என கூறியுள்ளார்.

இந்த பேச்சு இந்திய ரசிகர்களை மறைமுகமாக தாக்குவது போன்று அமைந்துள்ளதாக பலரும் பாக்கிஸ்தான் கேப்டன் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பாக்கிஸ்தானியர்கள் மட்டும் தான் கிரிக்கெட்டை நேசிக்கிறார்கள், இந்தியர்கள் நேசிப்பதில்லையா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கனவே பாக்கிஸ்தானில் இந்திய ராணுவ வீரர் அபிநந்தனை கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட விளம்பரத்தின் சர்ச்சை அடங்குவதற்கு முன்னரே இந்த பிரச்சனையும் இப்போது தலை தூக்கியுள்ளது.


Advertisement