"அதிசயம் நிகழும்; நாங்கள் அரையிறுதிக்கு செல்வோம்" பாக்கிஸ்தான் கேப்டன் நம்பிக்கை!

"அதிசயம் நிகழும்; நாங்கள் அரையிறுதிக்கு செல்வோம்" பாக்கிஸ்தான் கேப்டன் நம்பிக்கை!


Pakistan captain believes in God

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் இன்று பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. அரையிறுதிக்குள் நுழையும் நான்காவது அணியை இந்த போட்டி தான் தீர்மானிக்க போகிறது.

2019 உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகளில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போதைக்கு புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்து அரையிறுதிக்குள் முன்னேறிவிட்டன. நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

wc2019

ஆனால் அதே 11 புள்ளியை பெரும் வாய்ப்பு இன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளும் பாக்கிஸ்தான் அணிக்கு உள்ளது. பாக்கிஸ்தான் அணி இந்த போட்டியில் பங்களாதேசை வீழ்த்தினால் 11 புள்ளிகளுடன் நியூசிலாந்திற்கு இணையான புள்ளியை பெற்றுவிடும். இந்த சூழ்நிலையில் நெட் ரன்ரேட் அதிகம் கொண்டுள்ள அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

தற்போதைய நிலவரப்படி நியூசிலாந்தின் நெட் ரன்ரேட் +0.175. பாக்கிஸ்தானின் நெட் ரன்ரேட் -0.792. பாக்கிஸ்தான் அணி நியூசிலாந்தின் நெட் ரன்ரேட்டை விட அதிகமாக பெற பங்களாதேஷுடன் முதலில் பேட்டிங் செய்து இமாலய இலக்கை நிர்ணயித்து 300 ரன்களுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்.

wc2019

இந்நிலையில் பாக்கிஸ்தான் அணியின் கேப்டன் இதுகுறித்து பேசியபோது, "எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். கடைசி போட்டியை அதிகபட்ச லெவலில் வெற்றி பெறுவதற்கு எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். ஆனாலும் யத்தார்த்தமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். அல்லாஹ் உதவி செய்தால் அதிசயம் நிகழலாம். நீங்கள் ஒரு பிட்ச்சில் 600, 500 அல்லது 400க்கு மேல் ஸ்கோர் எடுக்கும் போது, மற்ற அணியை 50 ரன்களுக்குள் வெளியேற்ற முடியும் என்று நினைத்தால் அது கடினமான காரியம் தான். இருந்தாலும் அதற்கான முழு முயற்சியை நாங்கள் கொடுப்போம்" என கூறியுள்ளார்.