2011-இல் செய்த அதே யுக்தியை கையில் எடுக்கும் இந்தியா.. உலகக் கோப்பையை வெல்ல பலே திட்டம்..!

2011-இல் செய்த அதே யுக்தியை கையில் எடுக்கும் இந்தியா.. உலகக் கோப்பையை வெல்ல பலே திட்டம்..!


Paddy Upton appointment as mental condition coach

2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை  வென்றபோது இந்திய அணியின் பயிற்சியாளராக ஹாரி கிருஷ்டன் செயல்பட்டார். அந்த சமயத்தில் துணை பயிற்சியாளராக பாடி ஆப்டன் இருந்து வந்தார். அதன்பின் இருவருமே தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு 2013ஆம் ஆண்டில் அந்த அணியை டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிக்க வைத்தனர்.

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சர்வதேச டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதனை கருத்தில் கொண்டு 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்காக துணை பயிற்சியாளராக இருந்த பாடி ஆப்டனை மீண்டும் அணியில் சேர்த்துள்ளனர். 

BCCI

இப்போது இவர் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிற்கு கீழ் மன அழுத்த பயிற்சியாளராக செயல்பட உள்ளார். ஐபிஎல் தொடர்களில் ஏற்கனவே இருவரும் பல தருணங்களில் ஒன்றாக இணைந்து செயல்பட்டுள்ளனர். இந்த இணை இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார் பாடி ஆப்டன்.