ஒலிம்பிக்கில் நடந்த அதிசயம்.! தங்கப்பதக்கத்தை பகிர்ந்துகொண்ட வெவ்வேறு நாட்டு வீரர்கள்.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!

ஒலிம்பிக்கில் நடந்த அதிசயம்.! தங்கப்பதக்கத்தை பகிர்ந்துகொண்ட வெவ்வேறு நாட்டு வீரர்கள்.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!



olympic-players-shared-gold-medal

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தநிலையில் ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் கத்தார் மற்றும் இத்தாலி வீரர்கள் தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டதை அறிந்து உலகமே நெகிழ்ந்துள்ளது.

கத்தார் நாட்டைச் சேர்ந்த முர்தாஸ் எஸ்ஸா பார்சிமும் இத்தாலியின் கியான்மார்கோ தாம்பெரியும் டோக்யோ ஒலிம்பி உயரம் தாண்டுதலில் அடுத்தடுத்த உயரங்களைத் தாண்டிக் கொண்டே இருந்ததால் போட்டி மிக நீண்ட நேரமாக நீடித்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் பார்சிமும் தாம்பெரியும் 2.37 மீட்டர் உயரத்தைத் தாண்டியிருந்தார்கள்.
 olympic
அதற்கு அடுத்தாக 2.39 மீட்டர் உயரத்தைத் தாண்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருவரும் மூன்று முறை முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. அதனை அவர்கள்  தாண்டினால் அது ஒலிம்பிக் சாதனையாகக் கருதப்பட்டிருக்கும். இதனையடுத்து இருவரும் பதக்கத்தைப் பகிர்ந்து கொள்வது என முடிவு செய்தனர். அதனால் இருவருக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இந்த முடிவு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

வெற்றிக்கு பிறகு இருவரும் பரஸ்பரம் நட்பு பாராட்டிக் கொண்டது பலரையும் கவர்ந்தது. இந்தப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வழங்கப்படவில்லை. மூன்றாவதாக 2.37 மீட்டர் உயரம் தாண்டிய பெலாரஸ் நாட்டு வீரர் மாக்சிமுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் கத்தார் மற்றும் இத்தாலி வீரர்கள் தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டதை உலகமே பாராட்டியுள்ளது.