மஞ்சள்படை தளபதி சிஎஸ்கே கேப்டன் தோனியின் அசத்தலான திட்டம்.! சிஎஸ்கே அணிக்கு திரும்பும் 2 தமிழக வீரர்கள்.! குஷியில் ரசிகர்கள்.!

மஞ்சள்படை தளபதி சிஎஸ்கே கேப்டன் தோனியின் அசத்தலான திட்டம்.! சிஎஸ்கே அணிக்கு திரும்பும் 2 தமிழக வீரர்கள்.! குஷியில் ரசிகர்கள்.!


old-players-retun-to-csk

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் ஜனவரி மாதம் 2வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக ரசிகர்களை கொண்ட சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜா, தோனி, ருதுராஜ், மொயின் அலி ஆகியோரை ஏற்கனவே தக்கவைத்து கொண்டது. இந்நிலையில் அந்த அணியில் இருந்து வெளியேறிய பழைய வீரர்கள் மீண்டும் அணிக்குள் வரலாம் எனத் தெரிகிறது.

அதன்படி இந்த பட்டியலில் முதன்மை தேர்வாக தமிழக வீரர் விஜய் சங்கர் உள்ளார். விஜய் சங்கர் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக கடந்த 2014ம் ஆண்டு ஓப்பந்தமானார். ஆனால் அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடி பவுலிங்கில் மட்டும் 19 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதன்பின் வெளியேற்றப்பட்ட அவர், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார்.

csk

தற்போது சையது முஷ்டக் அலி கோப்பையில் தமிழக வீரர் விஜய் சங்கர் சிறப்பாக விளையாடியுள்ளதால் அவருக்கு சிஎஸ்கே நிச்சயம் குறிவைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக மற்றொரு தமிழக வீரர் அஸ்வினை சிஎஸ்கே ஏலம் எடுக்கலாம். இவர் 2009 முதல் 2015 வரை 97 போட்டிகளில் சிஎஸ்கேவுகாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பிராவோவின் இடத்திற்கு ஜேசன் ஹோல்டரை சிஎஸ்கே குறிவைத்துள்ளதக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால்  சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.