வாவ்.. பட்ஜெட் தாக்கல் இடையே இந்திய அணியை புகழ்ந்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..Nirmala seetharaman talks about indian cricket team

ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற சிறப்பான சாதனை குறித்து பட்ஜெட் தாக்கல் இடையே புகழ்ந்து பேசியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2021-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டுள்ள இந்த பட்ஜெட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிக்கொண்டிருந்தபோது இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பு குறித்து பேசியுள்ளார்.

nirmala seetharaman

பல துறைகளில் இந்தியா வலிமை பெற்றுவருவதாகவும், இந்தியாவின் வலிமையை பார்த்து உலக நாடுகளுக்கு இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது எனவும், ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெற்ற வரலாற்று சாதனை நமது வலிமையை பரைசாட்டுகிறது. இதை நினைத்து நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்றார்.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றி, வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.