2nd ODI: அணல் பறக்கும் பந்துவீச்சு.. போட்டிபோட்டு விக்கெட்டை கைப்பற்றும் இந்திய பௌலர்கள்.. ஊசலாடும் நியூசிலாந்து..!

2nd ODI: அணல் பறக்கும் பந்துவீச்சு.. போட்டிபோட்டு விக்கெட்டை கைப்பற்றும் இந்திய பௌலர்கள்.. ஊசலாடும் நியூசிலாந்து..!



Newzland batsmen struggle against Indian pacers

ராய்ப்பூரில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.

நியூசிலாந்து அணிகளுக்கு துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஃபின் ஆலன், முகமது சமி வீசிய முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் போல்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் முகமது சிராஜ் வீசிய ஆறாவது ஓவரில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மிட்செல் சமியின் அடுத்த ஓவரிலேயே ஒரு ரன்னில் வெளியேறினார்.

India vs Newzland

சமி மற்றும் சிராஜ் வீசிய முதல் 8 ஓவர்களில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஹார்டிக் பாண்டியா வீசிய 10 ஆவது ஓவரில் கான்வே 7 ரன்னிலும் தாகூர் வீசிய அடுத்த ஓவரிலேயே கேப்டன் லேதம் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 15 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

India vs Newzland

அடுத்ததாக ஜோடி சேர்ந்த பிலிப்ஸ் மற்றும் முதல் போட்டியில் அசத்திய ப்ரேஸ்வெல் இருவரும் சிறிது நேரம்‌ நிலைத்து நின்றனர். ஆனால் சமி வீசிய 19 ஆவது ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரிகளை விளாசிய ப்ரேஸ்வல் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.