கிரிக்கெட்டில் அந்த புதிய விதியை கொண்டு வர இது தான் சரியான நேரம் - அஸ்வின் அட்வைஸ்!

கிரிக்கெட்டில் அந்த புதிய விதியை கொண்டு வர இது தான் சரியான நேரம் - அஸ்வின் அட்வைஸ்!


News rule in cricket ashwin suggests

கிரிக்கெட் போட்டிகளில் ஆடா முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் பந்து வீசுவதற்கு முன்பே கிரீஸை விட்டு வெளியேறினால் ரன் கிடையாது என்ற புதிய விதியினை அமல்படுத்த வேண்டும் என அஸ்வின் அறிவுரை வழங்கியுள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் சில நெருக்கடியான சூழலில் ரன்களை விரைவாக எடுக்க பந்துவீச்சாளர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவதற்கு முன்னரே கிரீஸை கடந்து விடுகின்றனர். இதனால் பந்து அருகில் இருந்தாலும் ரன்களை எளிதில் எடுக்க முடியும்.

ashwin

பேட்ஸ்மேன்கள் இப்படி செய்வதால் பவுலர்களால் ரன் கொடுக்காமல் டாட் பால் வீச முடிவதில்லை. எனவே அவ்வாறு எடுக்கப்படும் ரன்கள் கணக்கில் கிடையாது என்ற விதியை இப்போதே அமல்படுத்த வேண்டும்.

இதற்கான சரியான நேரம் இதுதான். மேலும் இதனை கண்கானிக்க புதிய தொழில்நுட்பத்தினையும் உருவாக்க வேண்டும் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.