தோனியிடம் இருந்து முக்கியமான ஒன்றை கற்றுக்கொண்ட நியூசிலாந்து வீரர்! தல தோனி எப்பவுமே தலதான்!

தோனியிடம் இருந்து முக்கியமான ஒன்றை கற்றுக்கொண்ட நியூசிலாந்து வீரர்! தல தோனி எப்பவுமே தலதான்!



New Zealand player talk about MS Dhoni

ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, இந்த முறையும் சிறப்பாக விளையாடி இதுவரை 31போட்டிகள் முடிந்துள்ள நிலையில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது சென்னை அணி..

MS Dhoni

ஐபிஎல் போட்டியில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ள அணி என்றால் அது சென்னை அணி தான். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்கு கேப்டனாக உள்ளார். தல தோனி சென்னை அணியில் ஆடுவதால் தான் சென்னை அணிக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

சென்னை அணி முதலாவதாக பேட்டிங் செய்தாலும், இரண்டாவதாக பேட்டிங் செய்தாலும் தல தோனி ஆரம்பத்திலிருந்தே நிதானமாக ஓட்டங்களை சேர்ப்பார். ஆனால் கடைசி கட்ட ஓவர்களில் அதிரடி காட்டி எதிரணியை மிரளவிடுவார். இது உலக ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

MS Dhoni

இந்நிலையில், ராஜஸ்தான் அணியில் விளையாடி வரும் நியூசிலாந்து வீரரான இஷ் சோதி, தான் தோனியிடம் இருந்து பேட்டிங் பார்முலாவை கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தோனி எப்போதுமே ஆட்டத்தை புரிந்துகொண்டு ஆடுவார். டோனியை பார்த்து அதை கற்றுக் கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முயற்சி செய்கிறேன் என இஷ் சோதி தெரிவித்துள்ளார்.