சினிமா

அறுவை சிகிச்சையால் அவதிப்படும் ஹர்திக் பாண்ட்யா.!லண்டன் சென்று நலம் விசாரித்த முக்கிய பிரபலம்!!

Summary:

Neetha ambani meet harthick pandya in london

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். இந்நிலையில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டிக்கு பிறகு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து லண்டனில் உள்ள மருத்துவமனையில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு  அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. மேலும் சிறுகாயம் தான் விரைவில் சரியாகிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் அவர் நடக்க முடியாமல் குழந்தை போல தவழ்ந்து வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. 

அதனைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கான உடற்பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி லண்டனில் விளையாட்டு வணிக உச்சி மாநாட்டில் உரையாற்ற லண்டன் சென்றிருந்தார். அப்பொழுது அவர் ஹர்திக் பாண்டியாவை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார். 

 இந்நிலையில் அப்புகைப்படத்தை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லண்டனுக்கு வருகை தந்து என்னை சந்தித்து நலம் விசாரித்ததற்கு நன்றி என பதிவிட்டு வெளியிட்டுள்ளார். 


Advertisement