கிரிக்கெட் பிசியிலும் நடிகர் சதீஸுக்கு வாழ்த்து சொன்ன நம்ம யார்க்கர் மன்னன் நடராஜன்.! என்ன காரணம் தெரியுமா.?

கிரிக்கெட் பிசியிலும் நடிகர் சதீஸுக்கு வாழ்த்து சொன்ன நம்ம யார்க்கர் மன்னன் நடராஜன்.! என்ன காரணம் தெரியுமா.?


natarajan-wishes-to-actor-sathish

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து சதீஷ் அடுத்ததாக ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி நடிக்க உள்ளார். 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் மன்னன் நடராஜன் நடிகர் சதீஷ்க்கு வாழ்த்துக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சில பட பூஜையின் புகைப்படத்தை பகிர்ந்து, "உங்களது புதிய படத்திற்கு வாழ்த்துக்கள் சதீஷ் அண்ணா" என்ன பதிவிட்டுள்ளார்.