தமிழகம் இந்தியா விளையாட்டு

மைதானத்தில் கெத்தா நிற்கவேண்டிய நம்ம நடராஜன், மருத்துவமனையில் இப்டி இருக்காரே.! அவரே வெளியிட்ட புகைப்படம்.!

Summary:

தமிழக வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐ

தமிழக வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். நடராஜனுக்கு முழுங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகுவதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நடந்துவரும் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என நடராஜ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு “இன்று எனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்த்திய பிசிசிஐக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மேலும் நடராஜன் விரைவில் குணமாகி வீடு திரும்ப பிரபலங்கள் ரசிகர்கள் என தங்களது டுவிட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மைதானத்தில் கம்பீரமாக நிற்கவேண்டிய மனுஷன் இப்டி இருக்காரே.. நீங்கள் விரைவில் குணமடைந்து மைதானத்திற்கு வரவேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement