விளையாட்டு

இந்திய அணியில் சேர்க்கப்பட்டார் தமிழக வீரர் நடராஜன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டியில் இடம்

Summary:

தமிழக வீரர் நடராஜனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வீரர் நடராஜனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபில் 13 வது சீசன் T20 போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவருகிறார் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். நடராஜன் தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணியினரை மிரட்டிவரும்நிலையில் நடராஜனின் பந்துவீச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறிப்பாக யார்க்கர் மன்னன் பும்ரா, ரபடா மற்றும் சமி இவர்களை விட நடராஜன் இந்த தொடரில் அதிகமான யார்க்கர் பந்துகளை வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும் டெத் ஓவர் போடும் பணியை நடராஜன் சிறப்பாக செய்து வருகிறார். நேற்றைய போட்டியில் கூட கடைசி ஓவர் வீசிய நடராஜன் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

நடராஜனின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் புகழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் ஐபில் போட்டியில் விளையாடிவரும் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதா என்ற கேள்வி எழுந்தநிலையில், தற்போது அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் நடராஜனின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டியில் விளையாட நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டிருந்தநிலையில் அவர் தற்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறுகிறார். அவருக்கு பதில் தற்போது நடராஜன் T20 போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Advertisement